ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆப்கன் ராணுவத் தளத்திற்கு அருகில் தற்கொலைப்படை தாக்குதல்: 12 பேர் பலி 

ஆப்கானிஸ்தான் ராணுவத் தளத்திற்கு அருகில் நிகழ்ந்த தற்கொலைப்படை  தாக்குதலில்  மூன்று தீவிரவாதிகள் உட்பட 12 பேர் பலியாகினர் 

News image
Updated On :21 ஜனவரி 2019, 10:47 am

DIN

காபூல்: ஆப்கானிஸ்தான் ராணுவத் தளத்திற்கு அருகில் நிகழ்ந்த தற்கொலைப்படை  தாக்குதலில்  மூன்று தீவிரவாதிகள் உட்பட 12 பேர் பலியாகினர் 

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே பல வருடங்களாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்தச் சண்டையில் அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப் படைகள் அங்கு முகாமிட்டு தலிபான்களுக்கு எதிராகப் போரிட்டு வருகிறது. 

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் ராணுவத் தளத்திற்கு அருகில் நிகழ்ந்த தற்கொலைப்படை  தாக்குதலில்  மூன்று தீவிரவாதிகள் உட்பட 12 பேர் பலியாகினர் 
 
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் ராணுவ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுவதாவது:

திங்கட்கிழமையன்று  காலை  ஆப்கானிஸ்தானில் மத்தியப் பகுதியிலுள்ள வார்டக் மாகாணத்திலுள்ள ராணுவத் தளம் ஒன்றுக்கு அருகில் காரில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது.

தீவிரவாதிகள் நிகழ்த்திய இந்த தற்கொலைப் படை தாக்குதலில் மூன்று தீவிரவாதிகள் உட்பட 12 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர். 

இந்தத் தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். 

இவ்வாறு ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.