/

நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு!

பிரதமர் நரேந்திர மோடி தொடர்பான காவலரே திருடன் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல், உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:21 pm IST

பிரதமர் நரேந்திர மோடி தொடர்பான காவலரே திருடன் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல், உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

ரஃபேல் விவாகரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தொடர்பான பாதுகாவலரே திருடன் (சௌக்கிதார் சோர் ஹே) என்ற காங்கிரஸ் கட்சியின் விமர்சனத்தில் உச்ச நீதிமன்றத்தை தெரியாமல் இணைத்துவிட்டேன். இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன் என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சுமார் 3 பக்கங்கள் அடங்கிய பதில் மனுவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் தெரிவித்திருந்தார். 

எனவே இதுதொடர்பாக பாஜக எம்.பி. மீனாட்சி லேகி தாக்கல் செய்துள்ள அனைத்து அவமதிப்பு வழக்குகளையும் உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தனது மனுவில் ராகுல் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.