சீக்கிய போலீஸ் அதிகாரி அமெரிக்காவில் சுட்டுக் கொலை
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் போக்குவரத்து சிக்னலின் அருகில் சீக்கிய காவல்துறை அதிகாரி சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.


அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் போக்குவரத்து சிக்னலின் அருகில் சீக்கிய காவல்துறை அதிகாரி சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக டெக்ஸஸ் போலீஸ் அதிகாரி கூறியதாவது,
சைப்ரஸ் பகுதியில் உள்ள வில்லன்சி நீதிமன்றத்தின் பகுதியில் வெள்ளிக்கிழமை மதியம் 12.45 மணியளவில் அங்கு சென்ற காரை நிறுத்துமாறு தலிவால் உத்தரவிட்டார். அப்போது தலிவால் உடன் அந்த காரில் இருந்த ராபர்ட் சோலிஸ் (47) பேசிக்கொண்டிருந்தார்.
இந்நிலையில், தலிவால் தனது காருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த காரில் இருந்த நபர் ஓடிவந்து தலிவால் தலையில் பலமுறை சுட்டார். இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே தலிவால் உயிரிழந்தார்.
42 வயதான சந்தீப் தலிவால், ஹாரிஸ் கவுண்டியின் முதல் சீக்கிய போலீஸ் அதிகாரி ஆவார், தனது மத உரிமைகளையும், அடையாளங்களையும் விட்டுத்தர முடியாது என்று கூறி போராடி டர்பன் அணியும் உரிமையைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...