காந்தி சூரியப் பூங்கா: ஐ.நா. தலைமையகத்தில் பிரதமர் மோடி துவக்கி வைப்பு
ஐ.நா.பொதுச் சபை தலைமையகத்தில் காந்தி சூரியப் பூங்காவை செவ்வாய்கிழமை திறந்து வைத்தார்.


அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மகாத்மா காந்தியின் 150-ஆவது ஆண்டு பிறந்ததினத்தை முன்னிட்டு ஐ.நா.பொதுச் சபை தலைமையகத்தில் காந்தி சூரியப் பூங்காவை செவ்வாய்கிழமை திறந்து வைத்தார்.
வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் தென் கொரியா அதிபர் மூன்-ஜெய்-இன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் காந்தி சூரிய பூங்காவை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டதாவது: மகாத்மா காந்தியின் 150-வது பிறந்ததினத்தை முன்னிட்டு புகழஞ்சலி செலுத்த உலகம் ஒன்று சேர்ந்துள்ளது. காந்திய நினைவுகளைப் போற்றும் விதமாக இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...