மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காந்தி நினைவு ஐ.நா. தபால் தலை வெளியீடு

 வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் தென் கொரியா அதிபர் மூன்-ஜெய்-இன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்றனர்.

News image
காந்தி நினைவு ஐ.நா. தபால் தலை | நன்றி: ஏஎன்ஐ ட்விட்டர்
Updated On :25 செப்டம்பர் 2019, 4:58 am

DIN

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மகாத்மா காந்தியின் 150-ஆவது ஆண்டு பிறந்ததினத்தை முன்னிட்டு ஐ.நா.பொதுச் சபை தலைமையகத்தில் காந்தி சூரியப் பூங்காவை செவ்வாய்கிழமை திறந்து வைத்தார்.

இதில், வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் தென் கொரியா அதிபர் மூன்-ஜெய்-இன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், ஐ.நா தலைமையகத்தில் 'தற்கால உலகில் மகாத்மா காந்தியின் பங்களிப்பு' என்ற நிகழ்ச்சி செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற உலகத் தலைவர்களும் பங்கேற்றனர். 

அப்போது, 150-ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு மகாத்மா காந்தியை கௌரவிக்கும் விதமாக ஐக்கிய நாடுகள் சபையின் மகாத்மா காந்தி நினைவு தபால் தலை வெளியிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.