ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

புற்றுநோய் பாதித்த 4 வயது இந்தியச் சிறுமி, கரோனாவில் இருந்து மீண்டார்

துபையில் வாழும் 4 வயது இந்தியச் சிறுமி, புற்றுநோய் பாதித்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், கரோனா தொற்றுக்கு ஆளாகி, அதில் இருந்து மீண்டுள்ளார்.

News image
Updated On :28 ஏப்ரல் 2020, 8:14 am

PTI

துபை: துபையில் வாழும் 4 வயது இந்தியச் சிறுமி, புற்றுநோய் பாதித்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், கரோனா தொற்றுக்கு ஆளாகி, அதில் இருந்து மீண்டுள்ளார்.

மருத்துவப் பணியாளராக இருக்கும் அவரது தாய் மூலம், சிறுமி சிவாணிக்கும் தொற்றுப் பரவியுள்ளது. ஏப்ரல் 1ம் தேதி அவரும், அவரது தாயும் கரோனா தொற்று பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சிவாணிக்கு ஏற்கனவே புற்றுநோய் பாதித்து கீமோதெரபி சிகிச்சையை பெற்று வருவதால், அவருக்கு கூடுதல் கவனத்துடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிவாணி மிகவும் அரிதான சிறுநீரக புற்றுநோய் பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த நிலையில், தீவிர சிகிச்சையின் பயனாக அந்த சிறுமி ஏப்ரல் 20ம் தேதி கரோனாவில் இருந்து மீண்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அவருக்கு கரோனா பாதிப்பு தீவிரமடையும் என்று நாங்கள் அச்சமடைந்தோம். ஆனால், நல்லவேளையாக அப்படி எதுவும் நடைபெறவில்லை. தொடர்ந்து இரண்டு முறை அவருக்கு கரோனா தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவுகள் வந்ததை அடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அரபு நாடுகளில், கரோனா பாதித்து குணமடைந்த மிக இளம் வயது சிறுமியாக சிவாணி கருதப்படுகிறார். ஏற்கனவே, 7 வயது சிரிய நாட்டைச் சேர்ந்த சிறுமியும், அபு தாபியில் 9 வயதான ஃபிலிப்பினோ சிறுவனும் கரோனா பாதித்து குணமடைந்தவர்களாவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.