எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

டிசம்பரில் அமெரிக்காவில் 3 லட்சம் பேர் பலியாகியிருப்பர்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

டிசம்பர் மாதம் தொடக்கத்தில் அமெரிக்காவில் கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சமாக இருக்கும் என வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

News image
டிசம்பரில் அமெரிக்காவில் 3 லட்சம் பேர் பலியாகியிருப்பர்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
Updated On :7 ஆகஸ்ட் 2020, 7:22 am

DIN

டிசம்பர் மாதம் தொடக்கத்தில் அமெரிக்காவில் கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சமாக இருக்கும் என வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் கரோனா பாதிப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத அளவு அதிகரித்து வருகிறது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 60 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் டிசம்பர் 1 ஆம் தேதி அமெரிக்காவில் கரோனா பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை அடையும் எனத் தெரிய வந்துள்ளது.

மேலும், முக்கிய நகரங்கள் மிக விழிப்புணர்வுடன் இல்லாவிட்டால் புதியதாக பல காரோனா பாதிப்பு மையங்கள் உருவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

”நோய்த்தொற்றுகள் அதிகரிக்கும் போது மக்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு சமூக இடைவெளிகளைப் பின்பற்றுகின்றனர். பின்னர் நோய்த்தொற்று  குறையும் போது, ​​மக்கள் தங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்கிறார்கள்” என வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின்  டாக்டர். கிறிஸ்டோபர் முர்ரே கவலை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் தற்போது 50 லட்சத்து 32 இரண்டாயிரத்து 179 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.