ஓராண்டுக்குப் பின் பள்ளிக்குத் திரும்பும் கிரெய்தா
பருவநிலை மாற்ற ஆபத்துகள் குறித்து உலகம் முழுவதும் குரலெழுப்பி வந்த சிறுமி கிரெய்தா துன்பர்கி ஓராண்டுக்குப் பிறகு பள்ளிக்குத் திரும்பியதை அறிவித்துள்ளார்.
உலகில் அதிகரித்து வரும் பருவநிலை மாற்ற பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தவர் ஸ்வீடனைச் சேர்ந்த சிறுமி கிகிரெய்தா துன்பர்கி. இவர் கடந்த ஓராண்டாக பருவநிலை மாற்றம் குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளில் பங்கேற்று பேசி வந்தார்.
இந்நிலையில் காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான பிரச்சாரத்தின் ஒரு வருடத்தை நிறைவு செய்த கிரெய்தா தான் பள்ளிக்குத் திரும்பியதாக தனது சுட்டுரைப்பதிவில் தெரிவித்துள்ளார்.
எந்தப் பள்ளியில் படிக்க உள்ளார் என்பது குறித்த தகவலை அவர் தெரியப்படுத்தவில்லை. அவர் தனது பதிவில், “இறுதியாக மீண்டும் பள்ளியில் சேர மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.
கடைசியாக 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பள்ளி சென்ற கிரெய்தா அதன்பின் காலநிலை மாற்ற பிரச்னைகள் குறித்த பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.