இந்த ஆண்டு இறுதிக்குள் கரோனா தடுப்பூசி: டொனால்ட் டிரம்ப்
இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது விரைவில் கரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்


வாஷிங்டன்: இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது விரைவில் கரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் அவர் பேசுகையில், நமது தேசமும், உலகமும் "புதிய மற்றும் சக்திவாய்ந்த கண்ணுக்கு தெரியாத எதிரியால்" கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் பாதிப்பை எதிர்கொள்வது சாவலாக உள்ளது, அதனை எதிர்கொண்டு வருகிறோம்.
அமெரிக்காவில் 3 வெவ்வேறு தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளன. அவை இறுதிகட்ட பரிசோதனையில் உள்ளன. பாதுகாப்பான மற்றும் பயனுள்ள அந்த தடுப்பூசி இந்தாண்டு இறுதிக்குள் அல்லது விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து கரோனாவை வீழ்த்துவோம், முன்பை விட உற்சாகமாக செயல்படுவோம் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...