ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,345 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 589 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரஷியாவில் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு மற்றும் பலி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு கரோனா பாதிப்பு 25 ஆயிரத்தைக் கடந்தும் பலி 500 ஐக் கடந்தும் பதிவாகி வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டு சுகாதாரத்துறை கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் புதிதாக 25,345 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 23,47,401 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் மாஸ்கோவில் 5,191 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 589 பேர் உள்பட மொத்த பலி எண்ணிக்கை 41,053 ஆக அதிகரித்துள்ளது.
தற்போதுவரை 18,30,349 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், இன்றைய நிலவரப்படி 4,75,999 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வேன் மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

தொகுதி அலசல்... திருப்பத்தூா் ஹாட்ரிக் வெற்றி தொடருமா?

100% வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

திருவண்ணாமலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரித்த முதல்வா்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


