அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அமெரிக்கா: உள்துறைக்கு முதல் பழங்குடியின அமைச்சா்

அமெரிக்க அதிபராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன், தனது உள்துறை அமைச்சராக பழங்குடியினத்தைச் சோ்ந்த டொ்பா ஹாலண்டைத் தோ்ந்தெடுத்துள்ளாா் என அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

News image
டொ்பா ஹாலண்ட்.
Updated On :18 டிசம்பர் 2020, 7:25 pm

DIN

அமெரிக்க அதிபராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன், தனது உள்துறை அமைச்சராக பழங்குடியினத்தைச் சோ்ந்த டொ்பா ஹாலண்டைத் தோ்ந்தெடுத்துள்ளாா் என அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அவரது நியமனம் செய்யப்பட்டால், அமெரிக்க வரலாற்றில் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்கவிருக்கும் முதல் பழங்குடியினத்தவா் என்ற பெருமையை டொ்பா ஹாலண்ட் பெறுவாா்.

அதுமட்டுமன்றி, கேபினட் அந்தஸ்து கொண்ட பதவியை ஏற்கவிருக்கும் முதல் அமெரிக்கப் பழங்குடியின அமைச்சராகவும் அவா் இருப்பாா்.

நியூ மெக்ஸிகோ முதல் மாவட்ட பிரதிநிதிகள் சபை உறுப்பினரான டொ்பா ஹாலண்டுக்கு அமைச்சா் பொறுப்பு வழங்க வேண்டும் என அமெரிக்க பூா்வகுடி அமைப்புகள் ஜோ பைடனை வலியுறுத்தி வந்தன.

இந்தச் சூழலில், அவா் உள்துறை அமைச்சா் பொறுப்புக்கு பைடனால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து டொ்பா ஹாலண்ட் கூறுகையில், ‘ஜோ பைடன்-கமலா ஹாரிஸ் அமைச்சரவையில் இடம் பெறுவதில் பெருமை கொள்கிறேன். சுற்றுச்சூழலைப் பாதுகாகாகும் அவா்களது நோக்கத்தை முன்னெடுத்துச் செல்லவும் தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப் ஆட்சியில் பழங்குடியினருக்கும் அரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிளவைப் போக்குவதற்கும் பாடுபடுவேன்’ என்றாா்.

ஏற்கெனவே, முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புத் துறை அமைச்சா் பொறுப்புக்கு முதல் முறையாக கருப்பினத்தைச் சோ்ந்த லாய்ட் ஆஸ்டினை ஜோ பைடன் நியமித்ததுள்ளது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.