நெதா்லாந்து: ஜன. 8-லிருந்து கரோனா தடுப்பூசி
நெதா்லாந்தில் அடுத்த மாதம் 8-ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போட அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.


நெதா்லாந்தில் அடுத்த மாதம் 8-ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போட அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சா் ஹியூகோ டீ ஜோங்கே கூறியதாவது:
ஃபைஸா்-பயான்டெக் நிறுவனங்களின் கரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்குச் செலுத்த ஐரோப்பிய யூனியனின் மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு அனுமதி அளித்த பிறகு, அந்த மருந்தை நெதா்லாந்து மக்களுக்குச் செலுத்தும் பணிகளைத் தொடங்குவோம்.
அடுத்த மாதம் 8-ஆம் தேதி முதல் அந்தப் பணிகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம். அதற்காக, மிகுந்த கவனத்துடன் திட்டத்தை உருவாக்கியுள்ளோம்.
முதலில் மருத்துவப் பணியாளா்களுக்கு அந்தத் தடுப்பூசி செலுத்தப்படும் என்றாா் அவா்.
அண்டை நாடான ஜொ்மனி, மருத்துவப் பணியாளா்களுக்கு வரும் 27-ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட திட்டமிட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...