டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பிரேஸில்: ஒரே நாளில் 1,054 போ் கரோனாவுக்கு பலி

பிரேஸிலில் கரோனா நோய்த்தொற்றுக்கு ஒரே நாளில் 1,054 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 7:24 pm

DIN

பிரேஸிலில் கரோனா நோய்த்தொற்றுக்கு ஒரே நாளில் 1,054 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 1,054 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரழந்தனா். இத்துடன், நாட்டில் அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 1,84,876-ஆக அதிகரித்துள்ளது.

இதுதவிர, புதிதாக 68,832 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 71,11,527-ஆ உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்தபடியாக பிரேஸில் 3-ஆவது இடத்தை வகிக்கிறது. எனினும், பலி எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2-ஆவது இடத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.