வாஷிங்டன்: கர்ப்பிணிப் பெண்களுக்கு சுற்றுலா விசா வழங்குவதை கட்டுப்படுத்தும் திட்டத்தை அமெரிக்கா ஆலோசித்து வருகிறது.
டிரம்ப் தலைமயிலான அமெரிக்க நிர்வாகம், வெளிநாட்டினருக்கு விசா வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் வழிமுறைகளைக் கையாண்டு வருகிறது.
அதன் ஒருபடியாக, கர்ப்பிணிப் பெண்களுக்கு சுற்றுலா விசா வழங்குவதைக் கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள் அமெரிக்காவுக்கு வந்து, குழந்தை பெற்றுக் கொண்டால், அந்த குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை கிடைத்துவிடும் என்பதால், ஏராளமான கர்ப்பிணிகள் அமெரிக்காவுக்கு வருகின்றனர்.
இதனைத் தடுக்கும் வகையில், கர்ப்பிணிகளுக்கு சுற்றுலா விசா வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
எனவே, அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கும் பெண்களிடம், கர்ப்பிணியா என்றும், கருவுறும் திட்டம் இருக்கிறதா என்ற கேள்விகளும் இனி இடம்பெறும்.
அமெரிக்கக் குடியுரிமை பெற ஏராளமான ரஷ்யர்களும், சீனர்களும் அமெரிக்காவில் குழந்தை பெற்றுக் கொள்வார்கள். இவ்வாறு அமெரிக்கக் குடியுரிமை பெறும் வழிமுறையை உடைக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
என் மீது மட்டும் பல்வேறு வழக்குகள்; ஆனால், மமதா மீது இல்லை! ஏன்? பாஜகவுக்கு ராகுல் கேள்வி

டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார்

வெள்ளிச்சுடரே.... இரண்டு வானம் முதல் பாடல்!

குடும்பக் கதையில் நடிக்கும் கவின்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


