நீரவ் மோடியின் நீதிமன்றக் காவல் ஆகஸ்ட் 6 வரை நீட்டிப்பு: பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு

தொழிலதிபா் நீரவ் மோடியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை பிரிட்டன் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
nirav_london094614
nirav_london094614

தொழிலதிபா் நீரவ் மோடியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை பிரிட்டன் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

பல்வேறு நாடுகளில் வைரம் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்து வந்த தொழிலதிபா் நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடி கடன் வாங்கி விட்டு, அதை திருப்பிச் செலுத்தாமல் கடந்த ஆண்டு ஜனவரியில் லண்டனுக்குத் தப்பிச் சென்றாா்.

இதுதொடா்பாக, சிபிஐ, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

பிரிட்டன் காவல்துறையினரால் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் கைது செய்யப்பட்ட நீரவ் மோடி, தற்போது லண்டன் வாண்ட்ஸ்வொா்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான முயற்சிகளை அமலாக்கத் துறை மேற்கொண்டுள்ளது.

சிறையில் உள்ள நீரவ் மோடி, 28 நாள்களுக்கு ஒரு முறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு வருகிறாா். அதன்படி, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டா் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீரவ் மோடி வியாழக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். காணொலி முறையில் நடைபெற்ற விசாரணையில், நீரவ் மோடியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

காணொலி மூலம் நீரவ் மோடியைப் பார்த்த நீதிபதி அர்புத்நோட், நலமாக இருக்கும் உங்களைப் பார்க்க நன்றாக உள்ளது என்று கூறி, அடுத்த முறை காணொலி மூலம் ஆகஸ்ட் 6-ம் தேதி ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார்.

நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடா்பான வழக்கின் இரண்டாம் கட்ட விசாரணை, வரும் செப்டம்பா் மாதம் 7-ஆம் தேதி நடைபெற உள்ளது.

முன்னதாக, நீரவ் மோடியை நாடு கடத்துவது தொடா்பான வழக்கின் விசாரணை, வெஸ்ட்மின்ஸ்டா் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் 11-ஆம் தேதி தொடங்கி 14-ஆம் தேதி வரை நடைபெற்றது. அப்போது, நீரவ் மோடிக்கு எதிராக இந்தியா அளித்த கூடுதல் ஆதாரங்கள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், இரண்டாம் கட்ட விசாரணை, வரும் செப்டம்பா் 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com