

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,395 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 8,23,515 ஆக அதிகரித்துள்ளது.
உலக அளவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் 4வது நாடாக ரஷியா உள்ளது. முன்னதாக அமெரிக்கா, பிரேசில், இந்தியா முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன.
இந்நிலையில், ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் குறித்த விவரங்களை அந்நாட்டுச் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஒரேநாளில் 5,395 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அந்நாட்டில் மொத்த பாதிப்பு 8,23,515 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 150 பேர் பலியாகியுள்ளதை அடுத்து மொத்த உயிரிழப்பு 13,504 ஆக உயர்ந்துள்ளது.
அதேநேரத்தில் ஒரே நாளில் 8,888 பேர் குணமடைந்த நிலையில் மொத்தம் இதுவரை 6,12,217 பேர் முழுமையாக சிகிச்சை பெற்றுக் குணமடைந்துள்ளனர். அதேசமயம் தற்போது 2,61,000 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்.
மேலும் இதுவரை அந்த நாட்டில் 3 மில்லியன் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.