/

பாகிஸ்தானில் தொடர் குண்டுவெடிப்பு: நால்வர் பலி

பாகிஸ்தானின் கராச்சி மாகாணத்தில் வெள்ளியன்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் பொதுமக்கள் ஒருவர் உட்பட நால்வர் பலியாகினர்.

News image
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு
Updated On :21 ஜூன் 2020, 2:48 pm

ANI

கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி மாகாணத்தில் வெள்ளியன்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் பொதுமக்கள் ஒருவர் உட்பட நால்வர் பலியாகினர்.

பாகிஸ்தானின் தெற்குப்புற மாகாணமான சிந்துவில் இந்த தொடர் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. முதலாவதாக கராச்சி தலைநகர் சிந்த்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் பொதுமக்களில் ஒருவர் பலியானார். துணை ராணுவப் படை வீரர் ஒருவர் உட்பட எட்டு பேர் பலத்த காயமடைந்தனர்.

அதேபோல் கோட்கி மாவட்டத்தில் நடைபெற்ற இரண்டாவது குண்டுவெடிப்பில் ரோந்து பாதுகாவல் வீரர்கள் பலியாகினர்.

மூன்றவதாக லர்கானா மாவட்டத்தில் குண்டுவெடிப்பு நடைபெற்றது. ஆனால் இதில் யாருக்கும் உயிர்சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.