50 ஆயிரத்தைத் தாண்டியது பலி எண்ணிக்கை! இரண்டாம் இடத்தில் பிரேசில்

பிரேசில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 641 பேர் கரோனா தொற்றுக்குப் பலியாகியுள்ள நிலையில் அந்த நாட்டில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
50 ஆயிரத்தைத் தாண்டியது பலி எண்ணிக்கை! இரண்டாம் இடத்தில் பிரேசில்
Updated on
1 min read

பிரேசில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 641 பேர் கரோனா தொற்றுக்குப் பலியாகியுள்ள நிலையில் அந்த நாட்டில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மேலும், திங்கள்கிழமை காலை நிலவரப்படி மேலும், புதிதாக 17,459 பேருக்கு தொற்று நோய் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,85,038 ஆக உயர்ந்துள்ளது.

உலகளவில் நோய்த்தொற்று மற்றும் இறப்பு விகிதங்களில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. 

பிரேசிலின் அதிக மக்கள் தொகை கொண்ட தென்கிழக்கு மாநிலமான சாவ் பாலோ-வில் அதிகபட்சமாக 2,19,185 பேருக்குத் தொற்றும், 12,588 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளது. ரியோ டி ஜெனிரோவில் 96,133 பாதிப்பும், 8,875 இறப்புகளும், சியாராவில் 92,855 பாதிப்பும், 5,523 இறப்புகளும் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com