கரோனா: உலகளவில் பலி எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது
கரோனா வைரஸ் பாதிப்பால் உலகளவில் பலியானோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியுள்ளது.


கரோனா வைரஸ் பாதிப்பால் உலகளவில் பலியானோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. பல நாடுகளும் தங்களது எல்லைகளை மூடியுள்ளன, பல நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன, விமானம், பேருந்து, ரயில், கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளன.
இந்தச் சூழலில், அந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சா்வதேச நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன. வைரஸால் உலகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,07,725 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலியானோரின் எண்ணிக்கை தற்போது 13 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இதன்படி இத்தாலி-4,825, சீனா-3,261, ஈரான்-1,556, ஸ்பெயின்-1,378, பிரான்ஸ்-562, அமெரிக்காவில் 344 பேரும் பலியாகியுள்ளனர். இந்த வைரஸுக்கு இத்தாலில் நேற்று மட்டும் 793 பேர் பலியாகியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...