ரஷ்ய பிரதமர் விரைவில் குணமடைய டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார் மோடி
கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட ரஷ்ய பிரதமா் மிகைல் மிஷுஸ்டின் விரைவில் குணமடைய வாழ்த்துகள் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.


புது தில்லி: கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட ரஷ்ய பிரதமா் மிகைல் மிஷுஸ்டின் விரைவில் குணமடைய வாழ்த்துகள் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
ஏற்கெனவே, பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சனுக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு, தற்போது அதிலிருந்து அவா் மீண்டுள்ளார். இந்நிலையில், ரஷ்ய பிரதமருக்கு கரோனா பாதிப்புக்குள்ளாகி இருப்பது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பிரதமர் மோடி டிவிட்டரில் தெரிவித்தது..
ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் நல்ல ஆரோக்கியத்துடன் விரைவில் பூரண குணமடைய எனது வாழ்த்துகள் என்று ரஷ்ய மற்றும் ஆங்கில மொழிகளில் டிவீட் செய்துள்ளார்.
கரோனா தொற்றுநோயைத் தோற்கடிக்கும் முயற்சிகளில் நாங்கள் எங்கள் நெருங்கிய நண்பர் ரஷ்யாவுடன் நிற்கிறோம்.
பிரதமர் மிஷுஸ்டினுக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அவர் சுயமாக, தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...