பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு 22 ஆயிரம் ஆனது; ஒரே நாளில் 40 பேர் பலி
பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை காலை நிலவரப்படி 22 ஆயிரத்தைக் கடந்தது. நேற்று ஒரே நாளில் கரோனா பாதித்து 40 பேர் பலியாகியுள்ளனர்

pakistan094642

pakistan094642
பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை காலை நிலவரப்படி 22 ஆயிரத்தைக் கடந்தது. நேற்று ஒரே நாளில் கரோனா பாதித்து 40 பேர் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து அந்த நாட்டு தேசிய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,049 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் சோ்த்து, நாட்டில் அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 22,413-ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 40 போ் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தனா். இதையடுத்து அந்த நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 526-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...