அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மிக முன்னதாகத் துவங்கியுள்ள அமெரிக்கத் தடுப்பூசி ஆய்வு

கொவைட்-19 நோய் உலகளவில் பொருளாதாரம் மற்றும் சமூகத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பல்வேறு நாடுகள் தடுப்பூசி ஆய்வில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றன.

News image
Updated On :18 மே 2020, 7:05 am

DIN

கொவைட்-19 நோய் உலகளவில் பொருளாதாரம் மற்றும் சமூகத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பல்வேறு நாடுகள் தடுப்பூசி ஆய்வில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் மே 15ஆம் நாள் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், கடந்த ஜனவரி 11ஆம் நாள் அமெரிக்க அரசு கரோனா வைரஸ் தடுப்பூசி ஆய்வை மேற்கொள்ளத் துவங்கியதாகவும், இவ்வாண்டின் இறுதிக்குள் தடுப்பூசி தயாராகி விடும் என்றும் தெரிவித்தார்.

ஆனால், ஜனவரி 12ஆம் நாள் தான் கரோனா வைரஸின் மரபணு தொகுதி வரிசைத் தகவல்களை, உலகச் சுகாதார அமைப்புடன் சீனா பகிர்ந்து கொண்டது. ஆகவே அமெரிக்க அரசுக்கு ஏற்கெனவே கரோனா வைரஸ் பற்றி முழுக்க தெரிந்துள்ளது டிரம்பின் கூற்று மூலம் வெளியாகியது. வெகு காலத்துக்கு முன்பே தடுப்பூசி ஆய்வைத் துவங்கிய அமெரிக்கா, சில மாதங்கள் நேரத்தை வீணாக்கி, தொடர்புடைய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காதது ஏன் என்ற கேள்வி பொது மக்களிடையில் எழுந்துள்ளது.

Story image
Story image

மேலும், அதன் தடுப்பூசி உற்பத்தித் திட்டம் நம்பத்தக்காததாகும் என்று சில அமெரிக்கச் சுகாதார நிபுணர்கள் தெரிவித்தனர். இது குறித்து, அமெரிக்க ஒவ்வாமை மற்றும் தொற்று நோய் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ஃபாச்சி கூறுகையில், கரோனா வைரஸ் தடுப்பூசி ஆய்வுக்கு குறைந்தபட்சம் 12 முதல் 18 மாதங்கள் தேவைப்படும் என்று குறிப்பிட்டார்.

அண்மையில் அமெரிக்கா தற்சார்பாகச் செயல்படுவது குறித்து பிரிட்டனின் தி கார்டியேன் நாளேடு வெளியிட்ட கட்டுரை ஒன்றில், வரும் ஜுன் திங்கள் நடைபெறவுள்ள உலகின் தடுப்பூசி உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் திட்டம் அமெரிக்காவுக்கு இல்லை. இத்தனிச்சையான செயல், சர்வதேசக் கூட்டு முயற்சிக்குத் தீங்கு விளைவிக்கக் கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.            

தகவல்:சீன ஊடகக் குழுமம் 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.