அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையத்துக்கு நிர்ப்பந்தம்
அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையத்துக்கு டிரம்ப் அரசு நிர்பந்தம் அளித்துவருவதாக உலகின் முன்ணணி மருத்துவ இதழான தி லேன்செட் மே 16ஆம் நாள் வெளியிட்ட தலையங்கத்தில் குற்றஞ்சாட்டியுள்ளது.


அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையத்துக்கு டிரம்ப் அரசு நிர்பந்தம் அளித்துவருவதாக உலகின் முன்ணணி மருத்துவ இதழான தி லேன்செட் மே 16ஆம் நாள் வெளியிட்ட தலையங்கத்தில் குற்றஞ்சாட்டியுள்ளது.
அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையத்தின் வரவு செலவுத் திட்டத்தை அமெரிக்க அரசு படிப்படியாகக் குறைத்து வருகின்றது. இதன் விளைவாக, புதிய ரக கரோனா வைரஸ் பரவி வரும் காலத்தில், இந்த மையத்தின் திறன் நாளுக்குநாள் குறைந்து வருகின்றது.
ஏப்ரல் 22ஆம் நாள் நடைபெற்ற கரோனா வைரஸ் பற்றிய வெள்ளை மாளிகையின் செய்தியாளர் கூட்டத்தில் அந்த மையத்தின் தலைவர் ராபர்ட் ரெட்ஃபீல்ட், அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்புடன் கருத்து மாறுபாடு கொண்டார். அதற்குப் பிறகு, ராபர்ட் ரெட்ஃபீல்ட் செய்தியாளர் கூட்டத்துக்கு அழைக்கப்படவில்லை.
பொதுச் சுகாதாரத் துறை, அரசியல் கட்சிகளால் கட்டுப்படுத்தப்படக் கூடாது. இதை அமெரிக்க அரசு அறிந்து செயல்பட வேண்டும் என்று டிரம்ப்க்கு அத்தலையங்கத்தில் நேரடி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தகவல்:சீன ஊடகக் குழுமம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...