கரோனா காலத்தில் உதவியவர்களுக்குத் தலைதாழ்த்தி வணக்கம் தெரிவித்த தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதி
சீனாவில் இரு கூட்டத்தொடர்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மே 24ஆம் நாள் ஹூபெய்


சீனாவில் இரு கூட்டத்தொடர்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மே 24ஆம் நாள் ஹூபெய் மாநிலத்தின் பிரதிநிதிக் குழு, அரசு பணியறிக்கையைப் பரிசீலனை செய்தது. அப்போது வூ ஹான் நகரிலிருந்து வந்திருந்த பிரதிநிதியான யூ செங் தன்னுடைய உரைக்குப் பின்பாக தலைதாழ்த்தி வணக்கம் தெரிவித்தார். ஒரு பள்ளி ஆசிரியரான யூ செங், தலைகுனிந்து வணக்கம் செய்ததற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கின்றன.
வூஹான் நகரில் புதிய ரக கரோனா வைரசானது மிகக் கடுமையாக பரவிக் கொண்டிருந்த காலத்தில் இதர பணியாளர்களுடன் இணைந்து தன்னார்வத் தொண்டராகப் பணியாற்றிய யூ செங் பல்வேறு உதவிகளைச் செய்து வந்தார். வூஹான் நகரைச் சேர்ந்த தேசிய மக்கள் பேரவை பிரதிநிதியான அவர், கரோனா பரவல் காலத்தில் வூஹான் நகரில் நிகழ்ந்த உண்மையான சம்பவங்களை எடுத்துரைத்தார்.

யூ செங்கின் சக பணியாளர் ஒருவரின் குடும்பத்தில் அனைவரும் புதிய ரக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். அரசு கொடுத்த பன்முக மருத்துவ சிகிச்சையைப் பெற்ற பிறகு அவர்கள் அனைவரும் குணமடைந்தனர்.
அதேபோன்று நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த 87 வயதான முதியவர் ஒருவரும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட தரமான சிகிச்சையின் காரணமாக அவர் குணமடைந்தார்.
இவ்வாறு கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பலரும் யூ செங்கிடம், நீங்கள் அரசுத் தலைவர் ஷி ச்சிங்பிங்கைச் சந்திக்கும் போது, அவரிடம் எங்களின் நன்றியைத் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். அதோடு, சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சீன அரசுக்கும், வூஹான் நகருக்கு உதவி அளித்த நண்பர்களுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும் என்று இரு கூட்டத்தொடர்களில் கலந்துகொள்ளும் முன், அவர்கள் தன்னிடம் கேட்டுக் கொண்டதாகவும் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு கரோனா காலத்தில் உதவி புரிந்த அனைவருக்கும் தலைதாழ்த்தி வணக்கம் செலுத்தியதாகவும் யூ செங் தெரிவித்தார்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...