டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

உலக உணவுத்திட்ட அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு

2020-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஐ.நா. உணவுத்திட்ட அமைப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
உணவுத்திட்ட அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு
Updated On :9 அக்டோபர் 2020, 9:28 am

DIN

2020-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு உலக உணவுத்திட்ட அமைப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதில், அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படும். 

இந்நிலையில், இந்தாண்டிற்கான துறை வாரியாக நோபல் பரிசுகள் அக்.5, திங்கள்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, முதல் நாள் மருத்துவத் துறைக்கும், இரண்டாம் நாள் இயற்பியல் துறைக்கும், மூன்றாம் நாள் வேதியியல் துறைக்கும் அறிவிக்கப்பட்ட நிலையில், நான்காம் நாள் இலக்கியத்திற்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நார்வே தலைநகர் ஆஸ்லோவில்  2020-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு  உலக உணவுத்திட்ட அமைப்பிற்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பசிப்பிணிப் போக்குதல் மற்றும் போரைத்தவிர்த்து அமைதியை காப்பதால் இந்த விருதுக்கு உலக உணவுத்திட்ட அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து 53 ஆண்டுகளாக  83 நாடுகளில் 9 கோடிப் பேருக்கு உணவு வழங்கி சேவையாற்றி வந்ததால் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.