உலகளவில் கரோனா பாதிப்பு 4.14 கோடியைத் தாண்டியது

உலகளவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4,14,87,185 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 3 கோடி பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 
Globally, corona infection has crossed 4.14 crore

வியாழக்கிழமை காலை நிலவரப்படி, உலகளவில் 4,14,87,185 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 3,09,14,158 கோடி பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 1,13,6,341 பேர் உயிரிழந்துள்ளனர்

உலகம் முழுவதும் தற்போது 9,43,6,664 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 74,170 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

உலகளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 8,58,4,819 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,27,409 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் இந்தியாவும், மூன்றாம் இடத்தில் பிரேசில் மற்றும் நான்காம் இடத்தில் ரஷியாவும் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com