ரியோ டி ஜெனிரோ: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கரோனா தடுப்பூசி மருத்துவ பரிசோதனையில் பங்கேற்ற ஒரு தன்னார்வலர் பிரேசிலில் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை அறிவித்தனர்.
உலகளவில் நடைபெற்று வரும் பல்வேறு கரோனா நோய்த்தொற்று தடுப்பூசி சோதனைகளில் நடந்துள்ள முதல் உயிரிழப்பு இது.
மனித பேரழிவை ஏற்படுத்தி வரும் கரோனா நோய்த் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தடுப்பூசி பரிசோதனையில் இங்கிலாந்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் - அஸ்ட்ராஜெனெகா கூட்டணியில் தயாரிக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசி முன்னணியில் இருந்து வருகிறது. ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 1 மற்றும் 2 ஆம் கட்ட மனித பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.
மேலும், இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்திப் பார்க்கும் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனை இங்கிலாந்து, இந்தியா, பிரேசில், தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பரிசோதனையில் ஆயிரக்கணக்கான தன்னாவலர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், பிரேசிலின் ரியோ டிஜெனிரோவைச் சேர்ந்த மருத்துவர் ஜோனோ ஃபீடோசா (28) என்ற தன்னார்வலர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மருத்துவ தன்னார்வலராக இருந்தாலும், தடுப்பூசி மருத்துவ பரிசோதனை தொடரும், எந்தவொரு பாதுகாப்பு கவலையும் இல்லை என்றும் ஆய்வு செய்துள்ளதாகவும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து தயாரிப்பு நிறுவன ஆய்வின் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவ ரகசியத்தன்மை என்பது எந்தவொரு தனிப்பட்ட தன்னார்வலரையும் பற்றிய விவரங்களை கொடுக்க முடியாது என்றும், ஆனால் மதிப்பாய்வு செய்துகொள்ளும் என்றும்"தற்போதைய ஆய்வைத் தொடர்வது குறித்து எந்தவொரு கவலையும் ஏற்படுத்தவில்லை" என்று அஸ்ட்ரா ஜெனேகா மருந்து தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.
பிரேசிலில் இதுவரை சுமார் 8,000 தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது, உலகளவில் 20,000 க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
உயிரிழந்த தன்னார்வலர் ஒரு இளம் மருத்துவர், அவர் கரோனா நோயாளிகளுக்கு மார்ச் முதல் ரியோ டி ஜெனிரோவில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் அவசர வார்டு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை அளித்து வந்தவர்.
ஜோனோ ஃபீடோசா, கடந்த ஆண்டு மருத்துவ பட்டம் பெற்றார், மேலும் நோய்த்தொற்றுக்கு முன்பு நல்ல உடல்நலத்துடன் இருந்தார் என்று குடும்பத்தினரும் நண்பர்களும் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.
ஆய்வில் பங்கேற்பவர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள் அல்லது நோய்த்தொற்றுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ளும் பிற சுகாதாரத் துறை ஊழியர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முக்கிய துறையின் பெயரை மாற்றியது தில்லி பல்கலைக்கழக நிா்வாகக் குழு

ஜிபூட்டி அதிபா் 6-ஆவது முறையாக மீண்டும் வெற்றி
சென்னை மாநகராட்சி ஊழியா்களுக்கு வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் விடுப்பு!

ஜெயலலிதா ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாகத் திகழ்ந்தது: வி.கே. சசிகலா
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


