உலகம் முழுவதும் கரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
சீனாவில் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. 9 மாதங்களாகியும் கரோனா நோய்த் தொற்றின் தாக்கமும் பரவலும் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்த வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் உலகம் முழுவதும் கரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அந்த வகையில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 1,002,389ஆக உயர்ந்துள்ளது. மேலும் உலகளவில் அந்த வைரஸால் இதுவரை 3,33,04,666 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம், 24,634,298 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி, 76,67,979 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 65,129 தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். உலகளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 7,321,343 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,09,453 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


