ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,135 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. மேலும், 61 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் புதிதாக 8,135 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதில், 27% பேருக்கு அறிகுறிகள் இருந்துள்ளன.
இதையடுத்து, மொத்த பாதிப்பு 11,59,573 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 61 பேர் உள்பட இதுவரை 20,385 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேநேரத்தில் தற்போதுவரை 9,45,920 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி 1,93,268 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரஷியாவில் கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், ஒருநாள் கரோனா பாதிப்பு இரு மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 2,217 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் 2 ஆம் தேதியில் இருந்து மாஸ்கோவில் இதுவே அதிக ஒருநாள் பாதிப்பாகும்.
உலக அளவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவைத் தொடர்ந்து ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


