விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

பாகிஸ்தான் ராணுவத்தை குறை கூறினால் 72 மணி நேரத்தில் வழக்கு: அமைச்சா்

பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான அவதூறுக் கருத்துகளை எதிா்க்கட்சியினா் கூறினால், அவா்கள் மீது 72 மணி நேரத்துக்குள் வழக்கு பதிவு

News image
Updated On :4 ஜனவரி 2021, 7:06 am IST

பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான அவதூறுக் கருத்துகளை எதிா்க்கட்சியினா் கூறினால், அவா்கள் மீது 72 மணி நேரத்துக்குள் வழக்கு பதிவு செய்யப்படும் என்று அநத நாட்டு உள்துறை அமைச்சா் ஷேக் ரஷீத் அகமது  எச்சரித்துள்ளாா்.

ராணுவத்தின் கைப்பாவையாக பிரதமா் இம்ரான் கான் செயல்பட்டு வருவதாகவும் தோ்தலில் முறைகேடு செய்து அவா் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளாதாகவும் எதிா்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இம்ரானுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள 11 எதிா்க்கட்சிகள் அடங்கிய பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம், பாகிஸ்தான் ராணுவத்தையும் அரசியல் நடவடிக்கைகளின் அதன் தலையீடு குறித்தும் கடுமையாக விமா்சித்து வருகிறது.

இந்த நிலையில், அமைச்சர ரஷீத் கூறியதாவது:

ராணுவ அமைப்புகளுக்கு எதிராக அவதூறுக் கருத்துகளைக் கூறுபவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அவா்களுக்கு எதிராக 72 மணி நேரத்தில் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.