பிரேசிலில் கரோனா பலி எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது.
உலக அளவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் 3 ஆம் இடத்தில் பிரேசில் உள்ளது. பிரேசிலில் கரோனா இரண்டாம் அலை காரணமாக பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் அந்நாட்டு சுகாதார அமைப்பு இன்று வெளியிட்டுள்ள தகவலில் பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 1,524 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பிரேசிலில் கரோனா பலி 2,00,498 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் மொத்தமாக கரோனா பாதிப்பு 80 லட்சத்தைக் நெருங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 87,843 பேர் உள்பட இதுவரை 7,961,673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரத்தில் 70,96,931 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 6,64,244 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








