முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

2021-இல் கார்பன் செறிவு 50% அதிகரிக்கும்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

மனித செயல்பாடுகளால் வளிமண்டலத்தில் கார்பனின் செறிவானது தொழில் புரட்சிக்கு முந்தைய அளவைக் காட்டிலும் 2021ஆம் ஆண்டில் 50 சதவீதம் அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

News image

2021-இல் கார்பன் செறிவு 50% அதிகரிக்கும்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

Updated On :8 ஜனவரி 2021, 9:12 pm IST

மனித செயல்பாடுகளால் வளிமண்டலத்தில் கார்பனின் செறிவானது தொழில் புரட்சிக்கு முந்தைய அளவைக் காட்டிலும் 2021ஆம் ஆண்டில் 50 சதவீதம் அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தமானது காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. காலநிலை மாற்றத்தைத் தவிர்க்க நிலக்கரி, எண்ணெய் உள்ளிட்ட இயற்கை எரிவாயுகளுக்கு மாற்றான எரிபொருள்களை பயன்படுத்த விஞ்ஞானிகள் பரிந்துரைத்து வருகின்றனர்.

மனித செயல்பாடுகளால் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் செறிவானது அதிகரித்து வருகிறது. வளிமண்டலத்தில் கார்பனின் செறிவானது 25% சதவீதம் அதிகரிக்க 200 ஆண்டுகளுக்கும் மேலாகிய நிலையில் தற்போது 50% அதிகரிப்பானது வெறும் 30 ஆண்டுகளுக்குள்ளாக நடந்துள்ளதாக இங்கிலாந்து வானிலை கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடு மற்றும் காடழிப்பு ஆகியவற்றின் காரணமாக 2021ஆம் ஆண்டில் கார்பனின் செறிவு மேலும் அதிகரிக்கும்  என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொழில்துறை புரட்சியின் தொடக்கத்தில் இருந்த 278 பிபிஎம் கார்பனின் செறிவானது 2021ஆம் ஆண்டில் 50% அதிகரித்து 417 பிபிஎம்-ஆக இருக்கும் என்று ஆய்வு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது கார்பன் செறிவின் ஆண்டு சராசரியானது 416.3 பிபிஎம் அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.