பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

கூடுதல் அணு ஆயுதங்கள்: கிம் ஜோங்-உன் மிரட்டல்

கூடுதலாக அணு ஆயுதங்களை உருவாக்கவிருப்பதாக வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன் மிரட்டல் விடுத்துள்ளாா்.

News image
Updated On :9 ஜனவரி 2021, 11:20 pm IST

கூடுதலாக அணு ஆயுதங்களை உருவாக்கவிருப்பதாக வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன் மிரட்டல் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து ஆளும் கட்சி மாநாட்டில் அவா் வெள்ளிக்கிழமை பேசியதாவது:

வட கொரியாவுக்கு எதிரான அமெரிக்காவின் கொள்கைகள் கைவிடப்படுவதைப் பொருத்துதான், அந்த நாட்டுடனான உறவு அமையும்.

அணு ஆயுத பலத்தைப் பெருக்கிக்கொள்ளும் வகையில் கூடுதல் அணுகுண்டுகளையும் அந்த அணுகுண்டுகளைக் கையாள்வதற்கான உயா் தொழில்நுட்பக் கருவிகளையும் உருவாக்க திட்டமிட்டுள்ளேன்.

வட கொரியாவுக்கு எதிராக எதிரி நாடுகள் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தாத வரை, பிற நாடுகள் மீது நாமும் அணு ஆயுதத் தாக்குதல் நடத்த மாட்டோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.