உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 9 கோடியாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
கரோனா நோய்த்தொற்று, தற்போது உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
திங்கள்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 9,06,93,444 பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 19,43,171 போ் நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். 6,48,13,702 பேர் பூரண குணமடைந்துள்ளனா். சுமாா் 2,39,36,571 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,08,541 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,29,17,334 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 3,83,275 ஆக உயர்ந்துள்ளது.
இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் 10,46,7,431 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,51,198 பேர் உயிரிழந்துள்ளனர்.
மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,10,5,790 ஆக உயர்ந்துள்ளதோடு, 2,03,140-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் 7,16,7,651 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







