மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கரோனா: உலகளவில் உயிரிழப்பு 29.99 லட்சத்தைத் தாண்டியது

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13.96 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 29.99 லட்சமாக அதிகரித்துள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :16 ஏப்ரல் 2021, 3:26 am

DIN

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13.96 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 29.99 லட்சமாக அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கடந்த ஆண்டு மேலாக உலக மக்களை துன்பத்தில் ஆழ்த்தி அச்சுறுத்தும் கரோனாவுக்கு உலகம் முழுவதும் இதுவரை 13,96,76,468 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 29,99,404 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், 11,87,23,542 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 1,79,16,810 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,06,900 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 3,22,24,139  கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்‍கை 5,78,993-ஆக உயர்ந்துள்ளது. நேற்று வியாழக்கிழமை ஒரே நாளில் 74,479 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 895 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்று பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,42,87,740 பேர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இதுவரை 1,74,335 பேர் உயிரிழந்துள்ளனர். 

மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 1,37,58,093-ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 80,529 பேருக்கு தொற்று பாதிப்பும், 3,774 பேர் உயிரிழந்துள்ளனர். உலகின் தொற்று பாதிப்பால் அதிகம் உயிரிழந்தோர் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 3,65,954    பேர் பலியாகியுள்ளனர். மூன்றாவது இடத்தில் மெக்ஸிகோ உள்ளது. அங்கு இதுவரை 2,11,213 பேர் பலியாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.