தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

மே 14 வரை நகர்ப்புற கல்வி நிறுவனங்கள் மூடல்: நேபாள அரசு அறிவிப்பு

கரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து நேபாளத்தில் நகர்ப்புறங்களில்  உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் மே 14 வரை மூட அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. 

News image

நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஓலி

Updated On :19 ஏப்ரல் 2021, 11:51 am

கரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து நேபாளத்தில் நகர்ப்புறங்களில்  உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் மே 14 வரை மூட அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. 

கரோனா பரவல் குறித்து இன்று நடைபெற்ற நேபாள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, வருகிற மே 14 ஆம் தேதி வரை நகர்ப்புறங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்படுகின்றன. மேலும் மக்கள் கூடும் இடங்கள் அனைத்தையும் மூடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளைத் தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரபு ஷா தெரிவித்தார். 

முன்னதாக, கரோனா அதிகம் பரவும் இடங்களில் உள்ள கல்வி நிறுவனங்களை மட்டும் மூடுமாறு அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும், காத்மண்டு, லலித்பூர், பக்தாபூர், கஸ்கி, ரூபாண்டேஹி, சிட்வான், பாங்கே, பார்சா, கைலாலி, மொராங், டாங், சுர்கேத், பரா மற்றும் பங்களங் ஆகியவை கரோனா பரவும் மாவட்டங்களாக நேபாள அரசு  வகைப்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.