அஸ்திரேலியாவில் தொடரும் கரோனா அச்சம்: இதுவரை இல்லாத அளவுக்கு பரவல் அதிகரிப்பு
பல மாதங்களில் இல்லாத அளவுக்கு, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 262 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


பல மாதங்களில் இல்லாத அளவுக்கு, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 262 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு பல பகுதிகளுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், பல மாதங்களில் இல்லாத அளவுக்கு சிட்னி நகரில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த ஆறு வாரங்களாக ஊரடங்கு அமலில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இன்று (வியாழக்கிழமை) 262 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. கோவிட் - 19 காரணமாக ஐந்து பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் பிரிமியர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் கூறுகையில், "டெல்டா வகை கரோனாவை கட்டுப்படுத்துவது உலகம் முழுவதும் பல பகுதிகளுக்கு சவால் மிக்கதாக உள்ளது. நாம் முயற்சி செய்து வைரஸை அழிக்க முடியும். ஆனால், பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசியே முக்கிய பங்கு வகிக்கிறது" என்றார்.
இதனால், நியூகாசில் உள்பட ஹண்டர் பள்ளத்தாக்கு பகுதிகளில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...