பர்தா அணியாத இளம்பெண்ணை சுட்டுக்கொன்ற தலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் பர்தா அணியாத 21 வயதான இளம்பெண்ணை தலிபான் அமைப்பினர் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பர்தா அணியாத இளம்பெண்ணை சுட்டுக்கொன்ற தலிபான்கள்

பர்தா அணியாத இளம்பெண்ணை சுட்டுக்கொன்ற தலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் பர்தா அணியாத 21 வயதான இளம்பெண்ணை தலிபான் அமைப்பினர் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் பால்க் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நசானீன். 21 வயதான இவர் புதன்கிழமை காரில் தனது சொந்த மாவட்டத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அவரை இடைமறித்த தலிபான்கள் அவர்களது மத நம்பிக்கையின்படி பர்தா அணியாததைக் கண்டித்து பர்தா அணிய வற்புறுத்தியுள்ளனர். இதனை அவர் மறுக்கவே ஆத்திரமடைந்த தலிபான்கள் அவரை சுட்டுக் கொன்றனர். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எனினும் தலிபான்கள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் இதனை மறுத்துள்ளார்.
இதையும் படிக்க | பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக ராகுல்காந்தி போராட்டம்
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் அவ்வமைப்பினர் இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக அமல்படுத்தி வருகின்றனர். பெண்கள் தங்கள் உடலை முழுவதுமாக மூடிக் கொள்தல், வீடுகளை விட்டு வெளியேறி பணிக்கு செல்லாமலிருத்தல், பெண்கள் கல்வி கற்கத் தடை உள்ளிட்ட கடுமையான சட்டங்களை அமல்படுத்தியும், அதனை பின்பற்றாதவர்களை தண்டித்தும் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...