பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக ராகுல்காந்தி போராட்டம்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் தில்லி நடைபெற்ற போராட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் தில்லி நடைபெற்ற போராட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெட்ரோல் விலையானது ரூ.100-ஐ கடந்து விற்பனையாகிவருகிறது. அதேபோல் டீசலும் ரூ.90-ஐ கடந்துள்ளது.  உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் வியாழக்கிழமை தில்லியில் நடைபெற்ற பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்தப் போராட்டத்தின்போது மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சினர் முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்ந்து, “பிரதமர் மோடி வேலைவாய்ப்பு குறித்து ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. கடந்த 7 ஆண்டுகளில் 12 கோடி இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. பல இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை பிரதமர் மோடி பறித்துள்ளார்” எனவும் ராகுல் காந்தி விமரிசித்தார்.

மேலும் பெகாஸஸ் உளவு விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்த மறுத்துவருவதாகவும் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com