மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ஆப்கனைக் கைப்பற்றும் தலிபான்கள்: அமெரிக்கர்கள் உடனடியாக நாடு திரும்ப உத்தரவு

ஆப்கானிஸ்தான் நாட்டின் பெரும்பகுதிகளை தலிபான் அமைப்பினர் கைப்பற்றி வரும் நிலையில் அமெரிக்க வீரர்களை உடனடியாக நாடு திரும்ப அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
ஆப்கனைக் கைப்பற்றும் தலிபான்கள்: அமெரிக்கர்கள் உடனடியாக நாடு திரும்ப உத்தரவு
Updated On :7 ஆகஸ்ட் 2021, 11:10 am

DIN

ஆப்கானிஸ்தான் நாட்டின் பெரும்பகுதிகளை தலிபான் அமைப்பினர் கைப்பற்றி வரும் நிலையில் அமெரிக்க வீரர்களை உடனடியாக நாடு திரும்ப அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாகத் தங்கி சண்டையிட்டு வந்த அமெரிக்கப் படையினா், அங்கிருந்து முழுமையாக தங்களது நாடுகளுக்குத் திரும்பி வருகின்றனா். இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டுள்ள தலிபான் அமைப்பினர் நாட்டின் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி வருகின்றனர். எனினும், அவா்களுக்கு எதிராக ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. 

இதுவரை ஆப்கானிஸ்தானின் 421 மாவட்டங்கள்  தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. இரான், தஜிகிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதிகளும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தனிமனித பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவி வருவதால் அமெரிக்கர்கள் உடனடியாக நாடு திரும்ப அறிவுறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலிபான்கள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் பயணிகள் போக்குவரத்து குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க தூதரகம் பயன்பாட்டில் இருக்கக்கூடிய  பயணிகள் விமானங்களின் மூலம் உடனடியாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

முன்னதாக ஆப்கன் அரசின் தகவல் ஊடக மையத்தின் தலைவா் தாவா கான் மெனாபல் தலிபான் பயங்கரவாதிகளால் வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.