அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு கரோனா பரவல்..திணறும் சீனா

ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு சீனாவில் டெல்டா வகை கரோனா தீவிரமாக பரவிவருகிறது.

News image
கோப்புப்படம்
Updated On :10 ஆகஸ்ட் 2021, 10:21 am

DIN

சீனாவில் கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று (செவ்வாய்கிழமை) அதிகரித்துள்ளது. பரிசோதனை மையத்திலிருந்து பரவ தொடங்கிய கரோனா சீனாவுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

இதன் காரணமாக, பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. கரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முன்னதாக, கரோனா பரவலை முழுவதுமாக கட்டுப்படுத்தி பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையிலான நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், தற்போது டெல்டா வகை கரோனா தீவிரமாக பரவிவருகிறது. செவ்வாய்கிழமை மட்டும் 143 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கிழக்கு யாங்சோ நகரத்திலிருந்து கரோனா பரவ தொடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.