ஆப்கானிஸ்தான் விமான நிலையத்திலிருந்து அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கன் தலைநகர் காபூல் உள்பட அனைத்து பகுதிகளையும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளதையடுத்து ஆப்கன் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக அந்நாட்டு மக்கள் மற்றும் பிற நாட்டு மக்கள் பலர் காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.
இதையும் படிக்க | ஆப்கன் போர் முடிவுக்கு வந்தது: தலிபான்கள்
மேலும், விமானங்கள் அனைத்திலும் முந்தியடித்து கொண்டு ஏறுவதால் நிலைமை கையை மீறியுள்ளது. இதையடுத்து, காபூல் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்க படையினர், கூட்டத்தை கட்டுப்படுத்த வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், விமான நிலையத்தில் குவிந்துள்ள லட்சக்கணக்கானோர் விமான ஓடு தளங்களில் குவிந்துள்ளதால், விமானங்களை பாதுகாப்பாக தரையிறக்க முடியாத சூழல் எழுந்துள்ளது.
இதையும் படிக்க | இந்தியர்களை மீட்க ஆப்கன் செல்லும் மற்றொரு ஏர் இந்தியா விமானம்
இதையடுத்து காபூல் விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் அனைத்து விமான சேவையையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், இன்று பிற்பகல் 12.30 மணிக்கு தில்லியிலிருந்து கிளம்பவிருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்தியர்களை மீட்பது குறித்து மத்திய அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.