கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

தலிபான்கள் ஊடக நிறுவனங்களை மூடிவிடுவார்கள் - ஆப்கன் புகைப்பட பத்திரிகையாளர் எச்சரிக்கை

பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக இயங்க அனுமதிக்கப்படுவார்கள் என பொய்யான உறுதிமொழி அளித்துவிட்டு தலிபான்கள் மேற்கத்திய நாடுகளை ஏமாற்றிவருவதாக ஆப்கன் புதைப்பட பத்திரிகையாளர் குற்றம்சாட்டியுள்ளார்.

News image

தலிபான் படையினா் (கோப்புப் படம்).

Updated On :28 ஆகஸ்ட் 2021, 6:09 am

DIN

பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக இயங்க அனுமதிக்கப்படுவார்கள் என பொய்யான உறுதிமொழி அளித்துவிட்டு தலிபான்கள் மேற்கத்திய நாடுகளை ஏமாற்றிவருவதாக ஆப்கன் புதைப்பட பத்திரிகையாளர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள ஊடக நிறுவனங்களை தலிபான்கள் மூடிவிடுவார்கள் என்றும் பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக இயங்க அனுமதிக்கப்படுவார்கள் என பொய்யான உறுதிமொழி அளித்துவிட்டு மேற்கத்திய நாடுகளை அவர்கள் ஏமாற்றிவருவதாக ஆப்கன் புதைப்பட பத்திரிகையாளர் மசூத் ஹொசைனி குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு, சிறந்து விளங்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் புலிட்சர் விருது ஏஜென்ஸ் பிரான்ஸ்-பிரஸ் நிறுவனத்திற்காக பணியாற்றிய மசூத் ஹொசைனிக்கு வழங்கப்பட்டது. குறிப்பாக, பெண் பத்திரிகையாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது, ஃப்ரீலான்ஸராக பணியாற்றிவரும் ஹொசைனி, தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய அந்த நாளே காபூலிலிருந்து விமானம் மூலம் வெளியேறிவிட்டார். ஆப்கானிஸ்தானில் இயங்கும் ஊடகத்தின் எதிர்காலம் குறித்து கவலை தெரிவித்துள்ள ஹொசைனி, "நிலைமை மிகவும் மோசமாக மாறவுள்ளது. ஊடகத்தை ஒடுக்க அவர் முயற்சி செய்கிறார்கள். 

ஆனால், அதனை மெதுவாக செய்கிறார்கள். முதலில் தலிரான்கள் ஒருவரை பிடிப்பார்கள். பின்னர், தான் கொலை செய்வார்கள். இதுதான், தற்போது ஊடகத்திற்கு நடைபெற்றுவருகிறது. தலிபான்கள் ஊடகத்தை முழுவதுமாக மூடிவிடுவார்கள். இணையத்தையும் முழுவதுமாக முடக்கிவிடுவார்கள். இப்பகுதியின் மற்றொரு வட கொரியாவாக ஆப்கானிஸ்தான் மாறிவிடும்" என்றார்.

பெண்கள், சிறுமிகள் ஆகியோரை தலிபான்கள் வலுக்கட்டாயமாக திருமணம் செய்துகொள்வது குறித்த சிறப்பு செய்தியை வெளிநாட்டு பத்திரிகையாளருடன் இணைந்து  ஹொசைனி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.