மரியம் சூசன்
மரியம் சூசன்

அமெரிக்காவில் கேரள மாணவி சுட்டுக்கொலை

அமெரிக்காவில் கேரளத்தைச் சேர்ந்த மரியம் சூசன்  என்ற மாணவி சுட்டுக்  கொல்லப்பட்டார்.
Published on

அமெரிக்காவில் கேரளத்தைச் சேர்ந்த மரியம் சூசன்  என்ற மாணவி சுட்டுக்  கொல்லப்பட்டார்.

கேரளத்தைச் சேர்ந்தவரான இவர், கடந்த 5 மாதங்களுக்கு முன்னர்தான் குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறியுள்ளார். 

மாத்யூ மற்றும் பின்சி தம்பதியினரின் மகளான  மரியம் சூசன் (19), அமெரிக்காவில் அலபாமாவிலுள்ள கல்லூரியொன்றில் படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் (நவ. 30) மரியம் சூசன் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது வீட்டின் மேல் மாடியில் இருந்து  துப்பாக்கி தோட்டாக்கள்  பாய்ந்ததில்  உயிரிழந்தார்.

மேலும், சூசன் வீட்டின் மேல்மாடியில்  வசிப்பவர்  இவரைச் சுட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com