டாக்காவில் காளி கோயிலை திறந்து வைத்தார் ராம்நாத் கோவிந்த்

50 ஆண்டுகளுக்குப் பின் புனரமைக்கப்பட்ட ஸ்ரீ ராம்னா காளி கோயிலை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று திறந்துவைத்தார்.
டாக்காவில் காளி கோயிலை திறந்து வைத்தார் ராம்நாத் கோவிந்த்
டாக்காவில் காளி கோயிலை திறந்து வைத்தார் ராம்நாத் கோவிந்த்


டாக்கா: வங்கதேசத் தலைநககர் டாக்காவில், 1971ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தால் அழிக்கப்பட்ட நிலையில், 50 ஆண்டுகளுக்குப் பின் புனரமைக்கப்பட்ட ஸ்ரீ ராம்னா காளி கோயிலை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று திறந்துவைத்தார்.

இந்த கோயில், இந்தியா - வங்கதேச மக்களிடையேயான கலாச்சார மற்றும் ஆன்மிக நல்லுறவை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

பாகிஸ்தானிடமிருந்து விடுதலைபெற்று, 1971ஆம் ஆண்டு போரில் வெற்றி பெற்றதன் பொன் விழாக் கொண்டாட்டத்தில்  பங்கேற்க, வங்கதேச அதிபர் அப்துல் ஹமீத்தின் அழைப்பை ஏற்று இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அந்நாட்டுக்கு அரசுமுறைப் பயணமாகச் சென்றுள்ளார்.

இந்த பயணத்தின் போது, புனரமைக்கப்பட்ட காளி கோயிலை திறந்து வைத்த ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவீதா கோவிந்த், கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com