உலகம் முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டு வருகிற நிலையில் நெதர்லாந்தில் ஊரடங்கை அறிவித்திருக்கிறார்கள்.
ஐரோப்பா நாடுகளில் சமீப நாள்களாக கரோனா தொற்று அதிகரித்துவருகிறது. பல்வேறு தொற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் கரோனாவின் தாக்கம் குறையாமல் இருக்கிறது.
குறிப்பாக நேற்று (டிச.19) இங்கிலாந்தில் 82,000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் , உருமாறிய கரோனாவான ஒமைக்ரான் தொற்றும் அதிவேகமாகப் பரவி வருகிறது.
இந்நிலையில், ஐரோப்பா நாடுகளில் ஒன்றான நெதர்லாந்தில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதாலும் முன் எச்சரிக்கையைக் கருத்தில் கொண்டும் நேற்று (டிச.19) முதல் வருகிற ஜனவரி -14 ஆம் தேதி வரை நாடு முழுவதும் பொதுமுடக்கத்தை அறிவித்திருக்கிறார்கள்.
இதனால் , வணிக வளாகங்கள் , உணவகங்கள் , திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. மேலும், கிரிஸ்துமஸ் பண்டிகைக்கும் , புத்தாண்டு கொண்டாடத்திற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிக்க | 'வீம் மென்பொருள்’ நிறுவனத்தின் தலைமைச் செயலராக இந்தியர் நியமனம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில்... ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல: சிபிஎம் விமர்சனம்!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

பிளே ஆஃப்ஸ் போட்டிகளில் சொதப்பும் விராட் கோலி..! முற்றுப்புள்ளி வைப்பாரா?

ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



