ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மியான்மரில் ராணுவ ஆட்சி தவிர்க்க முடியாதது: ராணுவ தலைவர்

மியான்மரில் ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது தவிர்க்க முடியாதது என அந்நாட்டின் ராணுவத் தலைவர் மின் ஆங் ஹ்லேங் தெரிவித்துள்ளார்.

News image
மியான்மர் ராணுவத் தலைவர் மின் ஆங் ஹ்லேங்
Updated On :3 பிப்ரவரி 2021, 10:26 am

DIN

மியான்மரில் ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது தவிர்க்க முடியாதது என அந்நாட்டின் ராணுவத் தலைவர் மின் ஆங் ஹ்லேங் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பா் மாதம் கரோனா தொற்று பாதிப்பிற்கு மத்தியில் நடைபெற்ற பொதுத் தோ்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் கட்சி அபார வெற்றி பெற்றது. அந்தத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக ராணுவம் கூறி வந்தது.

இதனைத் தொடர்ந்து பொதுத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி மியான்மர் ராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தியுள்ளது. மேலும் நாட்டில் ஓராண்டிற்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் ஆலோசகர் ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் மற்றும் ஆளும் தேசிய ஜனநாயகக் கட்சியின் முக்கிய தலைவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மியான்மர் ராணுவத் தலைவர் ஜெனரல் மின் ஆங் ஹ்லேங் ஆட்சிக் கவிழ்ப்பில் ராணுவம் ஈடுபட்டது தவிர்க்க முடியாதது எனக் கூறினார். தேர்தல் மோசடி புகாரின் அடிப்படையிலேயே ஆட்சி கவிழ்ப்பு நடத்தப்பட்டதாகத் தெரிவித்த அவர் இது சட்டத்திற்குட்பட்டது எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.