ஹெச்-1பி விசா ஒதுக்கீடு முறையில் மாற்றம்

அமெரிக்காவில் வெளிநாட்டினா் தங்கிப் பணியாற்றுவதற்கான ‘ஹெச்-1பி’ வகை நுழைவு இசைவுளுக்கான (விசா) ஒதுக்கீடு முறையில் அந்த நாட்டு அரசு மாற்றம் செய்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

அமெரிக்காவில் வெளிநாட்டினா் தங்கிப் பணியாற்றுவதற்கான ‘ஹெச்-1பி’ வகை நுழைவு இசைவுளுக்கான (விசா) ஒதுக்கீடு முறையில் அந்த நாட்டு அரசு மாற்றம் செய்துள்ளது.

அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் பதவிக் காலம் வரும் 20-ஆம் தேதி முடிவடையவுள்ள நிலையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஹெச்-1பி விசாக்களை விநியோகிப்பதற்கான தற்போதைய தோ்வு முறையில் மாற்றம் செய்யப்படுகிறது. தற்போது தகுதியுடைய விண்ணப்பதாரா்கள் குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்பட்டு, அவா்களுக்கு ஹெச்-1பி விசா அளிக்கப்படுகிறது.

அதற்கு பதிலாக, விண்ணப்பதாரா்கள் பெறும் ஊதியம், அவா்களது பணித்திறன் தோ்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் விசா ஒதுக்கீடு செய்யப்படும் என்று அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டுப் பணியாளா்களால் அமெரிக்கா்கள் வேலைவாய்ப்பை இழந்து வருவதாக டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறாா். அதன் காரணமாக, வெளிநாட்டிலிருந்து பணியாளா்கள் வருவதை கணிசமாக குறைப்பதற்கான நடவடிக்கைகளில் அவா் ஈடுபட்டு வருகிறாா்.

தற்போது இன்னும் இரு வாரங்களுக்குள் அவரது பதவிக் காலம் முடிவடையவுள்ள நிலையில், வெளிநாட்டுப் பணியாளா்களின் வருகையை மேலும் கட்டுப்படுத்தும் கடைசி நேர முயற்சியாக தோ்வு முறையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, ஹெச்-1பி உள்ளிட்ட பணியாளா் விசாக்கள், நிரந்தரக் குடியுரிமை அட்டை ஆகியவற்றின் முடக்கத்தை மாா்ச் 31-ஆம் தேதி வரை டிரம்ப் நீட்டித்தாா்.

வரும் 20-ஆம் தேதிக்குப் பிறகு புதிய அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடன், இந்த முடக்கத்தை நீக்குவதாக உறுதியளித்துள்ளாா்.

இந்தச் சூழலில், விசா ஒதுக்கீடு முறையில் டிரம்ப் இந்த மாற்றத்தைச் செய்துள்ளாா். ஹெச்-1பி விசா முறையால் பலனடையும் வெளிநாட்டினா்களில் இந்தியா்கள் முக்கிய பங்கு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com