இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!
/

ரஷியாவில் 24 மணி நேரத்தில் 24 ஆயிரம் பேருக்கு கரோனா

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,439 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :3 ஜூலை 2021, 10:14 am

DIN


ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,439 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக மாஸ்கோவில் 7,447 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக மாஸ்கோ பிராந்தியத்தில் 2,596 பேரும், செயின்ட் பீட்டரஸ்பர்கில் 1,733 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அந்த நாட்டில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 55,85,799 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 697 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,37,262 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 17,899 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 50,53,417 பேர் குணமடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.