/

ரஷியாவில் ஒரேநாளில் 24,818 பேருக்கு கரோனா

ரஷியாவில் ஒரேநாளில் 24,818 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

News image
Updated On :8 ஜூலை 2021, 10:36 am

DIN

ரஷியாவில் ஒரேநாளில் 24,818 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அந்நாட்டில் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 24,818 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தலைநகர் மாஸ்கோவில் 6,040 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 57,07,452ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனாவால் இன்று மேலும் 734 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,40,775ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவிலிருந்து 21,336 பேர் மீண்டனர். 
இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 51,43,225ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரஷியாவில் கடந்த சில தினங்களாக கரோனா தொற்று அதிரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.